மட்டக்களப்பின் ஆரையம்பதி எல்லைப்பகுதியில் சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில் சிவபெருமானின் ருத்திர தாண்டவ திருவுருவச்சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாவரும் ஆற்றல் பேரவைத் தலைவருமான பூ.பிரசாந்தனின் ஆலோசனையின் பேரில் ஆற்றல் பேரவை,ஆரையம்பதி நரசிம்மர்ஆலயம் ஆரையம்பதி ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலய திருப்பணிச்சபை ஆரையம்பதி ஆலயங்களின் ஒண்றியம் என்பன இணைந்து ஆரையம்பதி கடற்கரையின் எல்லையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 21 அடி உயரங்கொண்ட இத் திருவுருவச்சிலையானது ஆரையம்பதி ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து நகர்வலமாக பிரதானவீதி உள்வீதி வழியாக கொட்டும் மழையிலும் பத்தர்களின் அரோகரா கோசத்துடன் கடற்கரையினைச்சென்றடைந்து அங்கு சிவஸ்ரீ.சோதிநாத சர்மாவினால் விஷேட பூசைகள் நடத்தப்பட்டு திருவுருவச்சிலையானது எல்லைச்சிவனாக நிறுவப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகான சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிபன் பொதுச் செயலாலரும் ஆரையம்பதி ஆற்றல் பேரவைத் தலைவருமான பூ.பிரசாந்தன்,மண்முனைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் திருமதி அருட்பிரகாசம்,ஆரையம்பதி ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலய திருப்பணிச்சபை மு.பஞ்சாச்சரம், மண்முனைப்பற்று ப.நே.கூட்டுறவுச்சங்கத்தலைவர் சிவசுந்தரம்,ஆற்றல் பேரவைச் செயலாளர் கிஸ்கந்தமுதலி ஓட்டோசங்கத்தலைவர் குகராஜா கி.ஆ.ச.தலைவர் சிவராஜா செல்வாநகர் கிழக்கு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இத் திருவுருவச்சிலையினை ஆரையம்பதியைச்சேர்ந்த ரூபனினால் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments