அன்பின் தமிழ் சகோதரர்களே என்ற தலைப்பில் முஸ்லிம் இளைஞர் அணி மட்டக்களப்பு என்றபெயரில் துண்டுப்பிரசுரம் ஆரையம்பதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்பளால் வீதீகளில் வீசப்பட்டுள்ளது.
இனத்துவேசம் கதைத்த பல தலைவர்கள் எப்படி செத்துப்போனார்கள் என்பது உங்களுக்குத்தெரியும் முஸ்லிம்களுக்கு எதிராக எவர் சதி செய்தாலும் இதே நிலமைதான் வரும். ஆரையம்பதி தமிழ் மக்களே காத்தான்குடி இல்லாவிட்டால் தொழில் புரிய எங்கு செல்வீர்கள். கோயில்குளம், ஒல்லிக்குளம், கர்பலா, கீச்சான்பள்ளம் எங்களது பரம்பரைக்காணிகள் தமிழருக்கு எந்த உரிமையும் இல்லை.
தமிழர்களின் உரிமைக்கட்சியானத.தே.கூட்டமைப்பும் நாங்களும் ஒன்றினைந்து சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக போராட உடன்படிக்கை மூலம் உடன்பாட்டிற்கு வந்துள்ள வேளையில் இப்படி இனத்துவேசத்தை தூண்டினால் எப்படி முஸ்லிம்களாகிய நாங்கள் வடகிழக்குஇணைப்புக்கு சாதகமாகஎப்படி செயற்படுவது என்பதுடன் இன்னும் பல விடயங்கள் அத்துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments