Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டி! - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு.

மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்வரும் மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்களில் தனியாக போட்டியிட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி மேல் மற்றும் தென் மாகாணசபைகள் கலைக்கப்பட உள்ளன. மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதே பொருத்தமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட இதுவரையில் எந்தவொரு கட்சியும் அழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் தேர்தலில் தனித்து போட்டியிடவே உத்தேசித்துள்ளதாகவும், கட்சியின் அதி உயர் பீடம் இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments