Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதலை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இந்த படகுகள் கச்சத்தீவு அருகே சென்றபோது அங்கு இலங்கை கடற்படையினர் 5 குட்டி கப்பல்களில் ரோந்து சென்றுள்ளனர்.
அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகளை பார்த்ததும், ‘மைக்’ மூலம் இலங்கை கடல்பகுதிக்குள் வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து மீன்பிடிப்பதை நிறுத்தி விட்டு தங்களது படகுகளை வந்த திசை நோக்கி திருப்பிக்கொண்டு இருந்தனர்.
ஆனால் அதற்குள் இலங்கை கடற்படையினர் அந்த படகுகளைச் சுற்றி வளைத்தனர். ராமேசுவரத்தை சேர்ந்த 2 படகுகளையும், அந்த படகுகளில் இருந்த 10 மீனவர்களையும் சிறைபிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
அவர்களிடம், இனி எல்லை தாண்டி வரமாட்டோம் என்று மீனவர்கள் கேட்டதைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் மீன்பிடிப்பதை தவிர்த்து கடலில் வேறு இடத்துக்குச் சென்று மீனவர்கள் மீன்பிடித்ததாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.



Post a Comment

0 Comments