மட்டக்களப்பில் காணமல் போனோரின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகம் முன்னெடுத்து வருகின்றது.
இந் நடவடிக்கைக்கு அமைய வவுணதீவுப் பிரதேசத்தில் வெள்ளிக் கிழமை இப் பதிவு இடம்பெற்றது.
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விசாரணை ஆணைக்குழுக்களின் சட்டம் 2ஆம் பிரிவு,393 அத்தியாயம் 15.08.2013 திகதியிட்ட 1823ஃ42 ம் இலக்க வர்த்தமானி அறிவிப்பு விசாரிப்பு ஆணைக்கழு சட்டம் 14 பிரிவு ஏற்பாடுகளுக்கு அமைய இப் பதிவு இடம்பெற்று வருகின்றது.
இப் பதிவினை இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி அ.செல்வேந்திரன் மற்றும் மணிப்பாளர் கதிர் பாரதிதாசன் ஆகியோர் மேற்கொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நிறைவேற்றுப் பணிப்பாளர் மட்டக்களப்பில் பரவலாக பதிவு இடம்பெற்று வருவதாகவும் கணிசமானவர்கள் பதிவினைச் செய்துள்ளதாகவும் பதிவினைச் செய்யாதவர்கள் மட்டக்களப்பு தெற்கு எல்லை வீதியில் இல 27 இல் அமைந்துள்ள தங்களது பணிமனைக்க வந்து பதிவினை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்
0 comments: