கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஒரு நாள்செலவுக்கு அந்நாட்டு மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கும்அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்,இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆண்டுசெலவுகளுக்கு 857 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அதாவது நாளொன்றுக்கு சுமார்
சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைஒதுக்கப்பட்டுள்ளது.
இதை நிமிடத்தில் கணக்கிட்டால் ஒரு நிமிட செலவுக்காக 16ஆயிரத்து 303.59 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்திற்காக அந்நாட்டு நாடாளுமன்றம்40 மில்லியன் பவுண்டுகளை அதாவது இலங்கை ரூபாய்மதிப்பில் 850 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்தநிலையில் பிரிட்டன் அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டபணத்தை விட, அதிகளவான பணம் தனி நபரானராஜபக்சேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அந்நாட்டுஎதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தை கிளப்பி உள்ளது.
0 Comments