சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மாலபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதோடு பணம் அச்சிட்ட அச்சகமும் இன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்தும் போலி நாணயத் தாள்களும் இரண்டாயிரம் ரூபா நாணய தாள்கள் என பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்து போலி நாணயத்தாள்களிலும் P67799159 என்ற தொடர் இலக்கம் காணப்படுவதாகவும் இவ்வாறான போலி நாணயத்தாள்கள் பல புழக்கத்தில் இருப்பதாகவும் அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே P67799159 என்ற தொடரிலக்கத்தையுடைய 2000 ரூபா நாணயத் தாள்கள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments