பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படம் காட்டிய அதிபர்
மஹவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலை பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோவை தமது கைத்தொலைபேசியில் காண்பித்ததாக கூறி பாடசாலை மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி பாடசாலைக்கு வராத காரணத்தால் பாடசாலை காலை நேரத்தில் தற்காலிகமாக மூட்பட்டது என கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
80 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் இப்பாடசாலையின் அதிபரை பாடசாலையிலிருந்து நீக்கும்படி பெற்றோர் நேற்றுக் காலை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
அதிபர் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தமது கைத்தொலைபேசியில் பூனைக்குட்டியொன்றின் படத்தை மாணவர்களுக்கு காண்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சுனாமி வீடியோவொன்றையும் அதன் பின்னர் பெண்களின் நிர்வாண பாலியல் காட்சிகளையும் காண்பித்துள்ளதாக மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதை அடுத்தே பெற்றோர் நேற்று முன்தினம் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்கள் எவரையும் பாடசாலைக்குள் செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
மாணவ வலைய கல்வித்த திணைக்களம் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றது.
0 comments: