Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அவுஸ்திரேலியா செல்ல தயாரான நபர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல தயாரான நபர் ஒருவரும் அந்நபருக்கு உதவிய ஒருவரும் மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருவெல்ல கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் பயணித்த வாகனம் ஒன்றும் ஒரு தொகுதி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அரிசி, பருப்பு, பால்மா, தண்ணீர் போத்தல்கள், கேஸ் சிலின்டர், மிளகாய்த் தூள், தேயிலைத் தூள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments