Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பெரியகல்லாற்றைச் சேர்ந்த காணாமல்போன சிறுவன் யாழில் மீட்பு

மட்டக்களப்பில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட சிறுவன் யாழ். பஸ் நிலையத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறைச் சேர்ந்த வடிவேல் சானுஜன் என்ற சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) காணமற்போயுள்ளார்.

இந்நிலையில், சிறுவன் ஒருவன் காணாமல் போனமை தொடர்பாக பத்திரிகையில் புகைப்படத்துடன் வந்திருந்த செய்தியினை சாவகச்சேரி பிரதேச வலுவூட்டல் ஆலோசகர் கத்தரித்து தன்னுடன் வைத்திருந்தார்.

மேற்படி ஆலோசகர் நேற்று சனிக்கிழமை யாழ்.பஸ் நிலையத்திற்கு வந்தபோது, தான் வைத்திருந்த படத்திற்குரிய சிறுவன் தனியாக நின்றிருப்பதினை அவதானித்து, அவனை மீட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

யாழ்ப்பாணப் பொலிஸார் இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் மட்டக்களப்பு பொலிஸாரிடம் சிறுவனை கையளிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments