Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் நீடிக்கப்படுகிறதா பயணத் தடை? இராணுவ பேச்சாளர் வெளியிட்ட தகவல்

 


நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை 28ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதற்கு இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்று இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடையானது எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இணைய ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் இராணுவ பேச்சாளரிடம் எமது செய்திப்பிரிவு வினவியிருந்தது.

இதற்குப் பதில் வழங்கிய அவர், தற்போது அமுலில் உள்ள பயணத் தடையானது 21ஆம் திகதி காலை வரை அமுலில் இருக்கும் என்றும், 28ஆம் திகதி வரை பயணத் தடையை நீடிக்கும் முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும், இது தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பயணத் தடையை நீக்க வேண்டாம் என்று சுகாதாரப் பிரிவினர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments