திருகோணமலை மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு, கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவருடன் தொடர்பைப் பேணிய சுமார் ஐம்பது பேருக்கு திருகோணமலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்படி தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான அனைவரையும் மட்டகளப்பு - பெரிய கல்லாறு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
0 comments: