Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் 13 பிரபல பாடசாலைகளை பொறுப்பேற்றது இராணுவம்

முப்படையினர் தங்குவதற்கு எனத் தெரிவித்து கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகள் 13 ஐ பொறுப்பேற்றுள்ளது இராணுவம்.
விடுமுறைகளுக்கு சென்று திரும்புபவர்கள் மற்றும் விடுமுறைகளில் செல்ல உள்ள இராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் தங்குவதற்கும் மேலதிக படையினரின் நடவடிக்கைகளுக்காகவும் எனத் தெரிவித்தே இப்பாடசாலைகள், கல்வி அமைச்சிடம் கோரப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு, றோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, மஹனாம கல்லூரி, பத்தரமுல்ல சுபூத்தி வித்தியாலயம், கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் உள்ளிட்ட பிரதான பாடசாலைகளே இவ்வாறு படையினரின் பாவனைக்காக வழங்கப்பட்டள்ளன.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாடசாலைகள் கோரப்பட்டால், அவற்றை வழங்குமாறு, அதிபர்களுக்கு கல்வி அமைச்சு ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments