Home » » மீண்டும் இவ்வருட இறுதிக்குள் தாக்குதல்! எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

மீண்டும் இவ்வருட இறுதிக்குள் தாக்குதல்! எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வருட இறுதிக்குள் புதிய பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காக ஈராக் மற்றும் சிரியாவிற்கு சென்ற 30,000 பேர் குறித்தும் அந்த அறிக்கையை தயாரித்த விசேட குழுவினர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகளில் சமீபத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ள போதிலும் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களால் ஆபத்துள்ளது எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் உயிருடன் இருக்கலாம், இவர்கள் அல்ஹொய்தா அல்லது புதிய பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து கொள்ளலாம் என ஐ.நா அறிக்கையை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலர் தலைவர்களாகவும் அல்லது தீவிரவாதமயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களாகவும் மாறலாம் என ஐ.நா அறிக்கையை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் தகவல்களை அடிப்படையாக வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.எஸ் அமைப்பிடம் சுமார் 300 மில்லியன் டொலர் வரை நிதி காணப்படுகின்றது. அந்த அமைப்பு தனது கௌரவத்தை காப்பாற்றுவதற்காக பிரச்சாரத்தை பயன்படுத்துகின்றது எனவும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல்கள் தற்போது குறைவடைந்துள்ள போதிலும் இந்த நிலை நீண்ட காலம் நீடிக்காது என தெரிவித்துள்ள ஐ.நா 2019 இறுதி வரை கூட தற்போதைய நிலை நீடிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |