Home » » கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை தடுத்த தேசிய தௌஹிக் ஜமாத் அமைப்பு!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை தடுத்த தேசிய தௌஹிக் ஜமாத் அமைப்பு!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது அல்லது செயற்பாட்டை தடுக்கின்ற விடயத்தில் தேசிய தௌஹிக் ஜமாத் அமைப்பு பாரிய பங்காற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்று வருகின்ற கம்பெரெலிய வேலைத்திட்டத்தினை மற்றும் வாழ்வாதார உதவிகள் குறித்து தெளிவுபடுத்தும் கூட்டம் இன்று பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு இனத்தின் மீது மறு இனம் அழுத்தத்தினை கொடுத்து உரிமைகளை தடுக்கின்ற செயற்பாட்டில் ஏனைய இனம் செயற்படுகின்ற விடயத்தை அங்கீகரிக்க முடியாது.
நாட்டிலே நடைபெற்ற பிரச்சினை கூட இன்னொரு இனத்திற்கான அங்கிகாரம், உரிமை கிடைக்கப்பெறாமல் தடுக்கப்படுகின்ற பொழுதுதான் நாட்டிலே பலதரப்பட்ட பிரச்சினைகள் எழுத்தொடங்குகின்றது.
இந்த தேசிய தௌபீக் ஜமாத் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது. கல்முனை வாழ் தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக மூன்று பக்க அறிக்கைகளை வாசித்து பிரகடனத்தை அறிவித்திருந்தார்கள்.
அவர்களுக்கு பின்னால் பல அரசியல்வாதிகள், பேரினவாத சக்திகளும் செயற்பட்டனர் என்பதை மறைக்க முடியாது.தேசிய தௌபீக் ஜமாத்திற்கு பின்னால் நின்ற நபர்கள் அரசியல்வாதிகள் குற்றவாளிகளாக அடயாளப்படுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கவேண்டுமென்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுக்க 40 வருடங்களாக தமிழ் மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தவர்களாக இருக்கின்றனர். அதற்கான வரலாறுகளும் இருக்கின்றன.
பல உரிமைப்போராட்டத்தை நடார்த்திய தமிழர்களுக்கு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் பின்னடைவை சந்தித்து வருகினாறோம் . இதற்கு பின்னால் பல அரசியல்வாதிகளும் பேரினவாத சக்திகளும் செயற்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக எல்லைப்பிரச்சினை, சகோதர இனங்களாலே ஒடுக்கப்படுகின்ற அழுத்தங்கள், நில ஆக்கிரமிப்பு,கல்வி,விளையாட்டு, கலைகலாச்சாரம்,பொருளாதார ரீதியான புறக்கணிப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டு தான் வருகின்றது.
கூடுதலான தமிழ் மக்கள் தங்கிவாழுகின்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். சுய தொழிலை மேற்கொண்டு எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்ற ஆளுமைமிக்கவர்களாக மாற வேண்டும்.
தமிழ் சமூகம் உயர்ந்த அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்றால் கல்வி,பொருளாதாரம் வலுப்பெற வேண்டும்.எனவே பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |