Home » » தற்கொலை குண்டுதாரிகளின் உறவினர்களின் ஏராளமான சொத்துக்களை முடக்க முடிவு

தற்கொலை குண்டுதாரிகளின் உறவினர்களின் ஏராளமான சொத்துக்களை முடக்க முடிவு



தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புபட்ட குண்டுதாரிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் சகல சொத்துக்களையும் முடக்குவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுத்தப்படும் பயங்கரவாத தடை சட்டம் மற்றும் பணச்சலவை சட்டம் என்பவற்றின் கீழ் இவர்களின் சொத்துக்களை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 250 ற்கும் ​மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இத் தாக்குதலில் ஈடுபட்ட 9 தற்கொலை குண்டுதாரிகளுக்கு நெருக்கமானவர்கள் பலரும் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணைகள் மூலம் பெருமளவு சொத்துக்கள் இருப்பது அடையாளங்காணப்பட்டுள்ளது.
  • கொச்சிக்கடை ஆலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர்,
  • கடுவாபிடிய ஆலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர்,
  • கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் மனைவி,
  • சங்கரில்லா ஹோட்டல் தாக்குதல்தாரிகள் இருவரில் ஒருவரின் சாரதி,
  • மற்றைய குண்டுதாரியின் சகோதரர்கள் இருவர்,
  • மட்டக்களப்பு தற்கொலை சூத்திரதாரிக்கு நெருக்கமானர்,
  • சங்கரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியின் செம்பு கைத்தொழிற்சாலைக்கு பொறுப்பான சகோதரர் மற்றும் மனைவி,
  • தெஹிவளை தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் இருவர் அடங்கலான உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள்
இவ்வாறு பலர் இப் பாரிய தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக விசாரணைகள் மூலம் புலனாகியுள்ளது.
அத்துடன் இவர்களின் பெருமளவு சொத்துக்களும் அடையாளங்காணப்பட்டுள்ளதோடு அவற்றை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |