Home » » பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை!

பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை!

அண்மையில் தாயகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை என மனித உரிமை ஆய்வளர் சி.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையை நிலைகுலைய வைத்த பயங்கரவாதிகளின் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட நினைவுச் சுடர் ஒளியேற்றலுடன் கண்டன கவனஈர்ப்பு ஒன்று கூடலும் நேற்று காலை 11 மணியளவில் பிரான்ஸ் de saint suplice devant தேவாலயத்தில் இடம்பெற்றது.
பிரான்சு நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்....
சிறிலங்காவின் தலைநகரிலும், தமிழர் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களிலும் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் எவரும் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று கண்டறியும்பொழுதுதான் அந்த தாக்குதலின் உண்மைத்தன்மை வெளிப்படும்.
உலகத்தில் எத்தனையோ நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாட்டு சபையை பொறுத்தவரையில் 195 நாடுகள் அங்கம் வகிக்கின்றது அவ்வாறான நாடுகள் இருக்கும் போது குறிப்பாக இலங்கையில் அதுவும் தமிழ் மக்களை தாக்குவதென்பது நீண்ட நாட்களாக திட்டமிட்ட செயலாகும் என இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
அதே போன்றுதான் மிக அண்மைக்காலமாக சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினரால் இலக்கு வைக்கப்படும் நாடு பிரான்ஸ் ஆகவே இலங்கையில் இருந்து புதிதாக வருபவர்களுடன் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் ஏன் என்றால் ஏற்கனவே நாங்கள் 3 தமிழீழ செயற்பாட்டாளர்களுடைய படுகொலையை கண்டிருக்கின்றோம் ஆதலால் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவும் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |