Home » » இலங்கையில் பயங்கரவாதிகளின் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல்

இலங்கையில் பயங்கரவாதிகளின் முதல் தாக்குதல் வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல்


மட்டக்களப்பு – வவுணதீவு பாலத்தில் இருந்த சோதனைச்சாவடியில், கடந்த வருடம் நவம்பர் மாதம் இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சஹரானின் வாகன சாரதிக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இந்தப் படுகொலைகளை மேற்கொண்டவர், குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய சஹரான் காசிமின் வாகன சாரதியான 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஸஹரானின் வாகன சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 54 வயதுடைய முகமது சரீப் ஆதம் லெப்பை கபூர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.ஸஹரானின் வாகன சாரதியான கபூரிடமிருந்து கைத் துப்பாக்கி மற்றும் லப்டொப் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் திடுக்கிடும் பல இரகசிங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஆசாத்தின் தாயார் மற்றும் வாகன சாரதி உட்பட 7 பேர் சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர். இதன்போது அவரிடமிருந்து மடிக்கணணி மற்றும் கைத்துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தான் ஸஹரானின் வாகன சாரதியாக 35 ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் 19 திகதி வவுணதீவு பொலிஸ் சோதனை சாவடியில் இருந்த பொலிஸாரை கத்தியால் தானே குத்தி கொலை செய்துள்ளதாகவும் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பான திட்டங்களை வகுக்கும்போது தான் உடனிருந்ததாகவும் கல்முனை – சாய்ந்தமருதில் அடுத்த தற்கொலை தாக்குதல் தொடர்பாக திட்டமிட்டபோது அங்கும் தான் இருந்ததாகவும் பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |