Home » » 200 கிலோ கல்லைக் கொண்டு தூக்குக் கயிற்றின் பலம் சோதனை!

200 கிலோ கல்லைக் கொண்டு தூக்குக் கயிற்றின் பலம் சோதனை!

இறக்குமதி செய்யப்படவுள்ள தூக்குக் கயிற்றின் பலத்தை 200 கிலோ எடை கொண்ட கல்லைப் பயன்படுத்தி பரிசோதிக்கவுள்ளதாக இலங்கை தரக்கட்டுப்பாடுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சித்திகா சேனாரட்ண தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள தூக்குக் கயிறு பழுதடைந்திருப்பதுடன் பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளது. பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இத் தூக்குக் கயிறு 12 வருடங்கள் பழைமை வாய்ந்தது.
இறக்குமதி செய்யப்படும் தூக்குக் கயிறு எவ்வாறான தரமுடையது என்பதற்கான அளவீடுகள் எதுவும் இலங்கையில் இல்லை. எனவே இறக்குமதி செய்யப்படும் தூக்குக் கயிற்றுக்குக் காணப்பட வேண்டிய தரத்தை அடிப்படையாகக் கொண்டே அதன் பலத்தை அல்லது தரத்தை இலங்கை தரக்கட்டுப்பாடுகள் நிறுவனம் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |