Home » » ஐ.நாவின் முகத்தில் அறைந்துள்ளது இலங்கை!

ஐ.நாவின் முகத்தில் அறைந்துள்ளது இலங்கை!

கடந்த சில மாதங்களாக இலங்கையின் உச்சநீதிமன்றம் செயற்பட்டுள்ள விதத்தினை வைத்து இலங்கை நீதிமன்றங்களிற்கு அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்கும் திறன் உள்ளது என்ற முடிவிற்கு எவராவது வந்திருந்ததால் சவேந்திர சில்வாவின் நியமனம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கியுள்ளது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மோதலின் இறுதி தருணங்களின் போது வன்னியில் சர்வதேச பிரசன்னம் எதுவும் காணப்படாமைக்கு சவேந்திர சில்வாவே காரணம் என ஐநா தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது என ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடும் நோக்கத்துடனேயே இது இடம்பெற்றது. ருவான்டாவிலும் இதுவே இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் எந்த வித சர்வதேச கண்காணிப்பும் இல்லாமல் போவதற்கு காரணமான ஒருவரை, விசாரணைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படும் உயர் பதவிக்கு நியமிக்க முடியுமா? எனவும் ருத்திரகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதி நிலைநாட்டப்படுவதற்கு சர்வதேச விசாரணை அவசியம் என்பதற்கான பல காரணங்களில் இதுவுமொன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவின் நியமனம் சர்வதேச சமூகத்திற்கு குறிப்பாக இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பது சாத்தியமாவதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கு பல வருடங்களாக நல்லெண்ணத்துடன் பாடுபட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு செய்யப்பட்ட பெரும் அவமரியாதையாகவும் எனவும் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேலதிகமாக இரண்டு வருடங்களை வழங்கியுள்ளது,அது இந்த வருடத்துடன் முடிவடைகின்றது, மேலும் இந்த வருடம் இலங்கையை ஐநா மனித உரிமை பேரவை ஆய்விற்கு உட்படுத்தவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்.
சவேந்திர சில்வாவின் நியமனத்தை தேசமொன்று அதன் கடமைகளை மறுத்துள்ளது என்ற அடிப்படையில் மனித உரிமை பேரவை விசாரணை செய்ய வேண்டும்,இலங்கைக்கு மேலதிக கால அவகாசத்தை வழங்க கூடாது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகப்பெருமளலாவினாவர்கள் காணாமல்போனமைக்கு காரணமான ஒருவரை உயர்ந்த பதவிக்கு நியமிப்பதே காணாமல்போனோர் அலுவலகத்தை பலவீனப்படுத்துவதற்கான சிறந்த வழியெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |