Home » » அவசர எச்சரிக்கை: யாழ்ப்பாணம்-கொழும்பு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

அவசர எச்சரிக்கை: யாழ்ப்பாணம்-கொழும்பு மக்களுக்கு அதிர்ச்சி செய்தி!

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவதால் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வழிமுறைகளை உடனடியாக பின்பற்றுமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 நாட்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்று தொற்றுநோய்த் தடுபு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆகக்கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 625 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தகட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 499 நோயாளிகளும் கம்பஹா மாவட்டத்தில் 180 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி மாத்தறை களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளிகள் கூடுதலாக இனங்காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார சிறப்பு நிபுணர், டொக்டர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |