Home » » பாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி

பாடசாலை செல்லச் சிரமப்படும் மாணவிக்கு அரசாங்க அதிபரால் துவிச்சக்கர வண்டி


குடும்ப நிலைமை காரணமாக பாடசாலை செல்வதற்குச் சிரமப்படும் கரவெட்டியைச் சேர்ந்த நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவி ஒருவருக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13.01.2019) மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரினால் துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த குறித்த மாணவி தன்னுடைய கல்விக்கான தேவை குறித்து முனவைத்ததன் அடிப்படையில் மாணவிக்கான கற்றல் உபகரணங்கள் அரசாங்க அதிபரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
அதன் தொடர்ச்சியாக தனது நண்பரும் அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான றொக்கி பாண்ஸிடம் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாரினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் வறுமை நிலை மற்றும் போக்குவரதது சிரமம் காரணமாகவும் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற அடிபபடையில் அரசாங்க அதிபரால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இவ் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வில், மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் ஆர்.தியாகரெத்தினம், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் றொக்கி பாண்ஸ், சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர் என்வரதராஜ் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த மாணவியின் தந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொழில் செய்யமுடியாத நிலையிலும் உள்ளார். தாயாரும் நோய்வாய்ப்பட்டவராக உள்ளதனால் குறித்த மாணவி கரவெட்டியிலிருந்து நாவற்காடு நாமகள் வித்தியாலயத்துக்கு போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையிலுள்ளார். இதனைத் தவிர்க்கும் வகையில் இந்தத் துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |