Home » » ஒரு இலட்சம் ரூபா உதவிக்கு 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் - வசமாக மாட்டினார் பெண் அதிகாரி!

ஒரு இலட்சம் ரூபா உதவிக்கு 15 ஆயிரம் ரூபா இலஞ்சம் - வசமாக மாட்டினார் பெண் அதிகாரி!

போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வி­யா­கக் கிணறு அமைப்­ப­தற்கு ஒரு லட்­சம் ரூபா வழங்­கு­வ­தற்கு இலஞ்­சம் பெற்­றார் என்ற குற்­றச்­சாட்­டில் பூந­கரி பிர­தேச செய­லர் பிரி­வைச் சேர்ந்த பெண் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வர் நேற்­றுமுன்தினம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ரான அந்­தப் பெண் உத்­தி­யோ­கத்­தர் பய­னா­ளி­க­ளுக்கு ஒரு லட்­சம் ரூபா­வுக்­கான காசோ­லையை வழங்­கும்­போது 15 ஆயி­ரம் ரூபா பணம் இலஞ்­ச­மா­கக் கோரு­கின்­றார் என்று பய­னாளி ஒரு­வ­ரால் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு­வின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது. இலஞ்­சப் பணத்­தைப் பிர­தேச செய­ல­கம் முன்­பாக உள்ள ஒரு தேநீர் கடை­யில் வைத்தே வழங்­கப்­ப­டு­கின்­றது என்று ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கிய முறைப்­பாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்­பாக ஆராய்­வ­தற்கு ஆணைக்­கு­ழு­வின் அதி­கா­ரி­கள் சிலர் கொழும்­பில் இருந்து பொலி­ஸார் சகி­தம் வந்­தி­ருந்­த­னர்.
அவர்­க­ளில் இரு­வர் நேற்றுமுன்தினம் சிவில் உடை­யில் வழிப்­போக்­கர்­கள் போன்று அந்­தத் தேநீர் கடை­யில் தேநீர் அருந்­தி­யுள்­ள­னர். பய­னாளி ஒரு­வர் காசோ­லை­யைப் பெறு­வ­தற்­கான லஞ்­சப் பணத்தை தேநீர் கடை­யில் வைத்து அந்த பெண் உத்­தி­யோ­கத்­த­ரி­டம் கொடுத்­த­போது, ஒளிப்­பட ஆதா­ரம் சகி­தம் அவ­ரைக் கைது செய்­த­னர்.
இந்த உத்­தி­யோ­கத்­தர் நீண்­ட­கா­லம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தில் பணி­யாற்றி சில மாதங்­க­ளுக்கு முன்­னரே பூந­க­ரிப் பிர­தேச செய­ல­கத்­துக்கு இட­மாற்­றம் பெற்று வந்­துள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது.
இலஞ்­சம் பெற்­ற­மைக்­காக அந்த உத்­தி­யோ­கத்­தர் கைது செய்­யப்­பட்­ட­மையை கிளி­நொச்சி மாவட்ட மேல­திக மாவட்­டச் செய­ல­ரும் உறுதி செய்­தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |