( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பொத்துவில் தகராம்பளை பகுதியில் காட்டு யானை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்கியதில் விவசாயியொருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
யானை தாக்கியதில் உயரிழந்தவர் பொத்துவில் நூராணியா வீதியைச் சேர்ந்த விவசாயியான 56 வயதுடைய அலியார் அபுசாலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விவசாய நடவடிக்கைகளுக்காக வயலுக்கு சென்ற வேளை காட்டில் மறைந்திருந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளானவரின் ஜனாசா பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டும் வருகின்றனர்.
0 Comments