சிறிலங்காவின் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ரணில்விக்கிரமசிங்க, எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் அலரிமாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்று மைத்ரி – மஹிந்த கூட்டணி காலக்கெடு விதித்துள்ளது. இந்த காலகெடுவுக்குள் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையைவிட்டுவெளியேறாவிட்டால் மக்கள் வெள்ளத்தை அழைத்துவந்து அவரைஅங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக மைத்ரி –மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்றஉறுப்பினர் சுசில் பிரேமஜயந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஜன மகிமய’ என்ற பெயரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலானமைத்ரி – மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இன்றைய தினம் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பொதுக் கூட்டமொன்றை நடத்தியது. புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்தாவாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், சபாநாயகர் கருஜயசூரியவையும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்
நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையை பலவந்தமாக கைப்பற்றி வைத்துள்ளார். அவருக்கு 48மணித்தியாலங்கள் காலக்கெடு விதிக்கின்றோம். அதற்குள் அவர்கள்அங்கிருந்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் இங்குகூடியுள்ள மக்களை கொண்டு நடவடிக்கை எடுப்போம். மஹிந்தவின் நியமனம் சட்டரீதியானது. அதனால் தான் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஆசனம் ஒதுக்குவதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார்.
எனினும் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய வேறு கதை ஒன்றை சொல்ல முற்படுகின்றார். ஒருவாரத்துக்கு முன்பு கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கின்றார். அந்த ஆவணத்தில் கையொப்பமிட்டவர்களில் பலர் இன்று அங்கு இல்லை. அவர்கள் மஹிந்த பக்கம் வந்துள்ளனர். இன்று இரவாகும் போது மேலும் பலர் மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.
14ஆம்திகதியாகும் போது நாங்கள் 120 என்ற பெருபான்மையை நாடாளுமன்றத்தில் காட்டுவோம். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை சட்டவிரோதமாக கூட்டினால் இங்குள்ள மக்கள் கூட்டம் சபாநாயகரின் வீட்டின் ஊடாக தியவன்னா ஓயாவை சென்றடையும் என்று தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் நாடாளுமன்றம் ஆரம்பமான உடன்நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொண்டு புதிய சபாநாயகரை நியமிப்போம் என கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
விமல் வீரவன்ச கருத்துத் தெரிவிக்கையில், நாட்டை பீடித்திருந்த புற்றுநோயான ரணில்விக்கிரசிங்கவை நீக்காமல் ஸ்ரீலங்காவுக்கு முன்னேற்றம் இல்லை. மூச்செடுக்க முடியாது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்ப மாத்திரமன்றி புலனாய்வு அதிகாரிகள் உட்பட நாட்டை மீட்ட படைஅதிகாரிகளை சிறையில் அடைத்த யுகத்தை ஒழிப்பதற்கும் இராணுவத்தினர் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் தேசிய பாதுகாப்புக்கு புத்துயிர் கொடுக்கவும் பாதாள உலக குழுக்களின் எழுச்சியை தடுக்கவும் இன மத மொழி பேதமின்று ஒற்றுமையுடனும் பாதுகாப்புடனும் வாழ விக்கிரமசிங்க என்ற நோயை ஒழிக்க வேண்டிய தேவை எழுந்திருந்தது.
ஜனாநாயக்கத்தை பாதுகாக்கவும் தேர்தலை ஒத்திவைக்கும்நடவடிக்கைக்கு முடிவு கட்டவும் விக்கிரமசிங்க என்ற நோயை ஒழிக்கவேண்டியிருந்தது. அதனையே எமது ஜனாதிபதி தைரியமாகமேற்கொண்டிருக்கின்றார். அதனை சிலர் ஜனநாயக விரோதச் செயல் என்கின்றனர். ஆனால் இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கும்,நாட்டையும், நாட்டு மக்களையும்அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட உன்னதமான தீர்மானம் ஆகும்.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச தனக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் இருப்பதை நிரூபித்துகாண்பிக்கும் வரை அவரை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தலொன்றை விடுத்திருந்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள மஹிந்ந்த – மைத்ரி கூட்டணி சபாநாயகர் கரு ஜயசூரியவை கடுமையாக விமர்சித்து வருகின்றது. இந்தநிலையில் நாடாளுமன்ற சுற்றுவடடத்தில் நடைபெற்ற பெதுக் கூட்டத்தில்உரையாற்றிய விமல் வீரவன்ச, சபாநாயகர் கரு ஜயசூரியவை மிகமோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்ததுடன், எச்சரிக்கையும்விடுத்தார்.
இதன் போது விமல் வீரவன்ச தெரிவித்ததாவது, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வின்ஸ்டன்கருவாக முயற்சிக்கின்றார். அவ்வாறு முயற்சித்தால் இறுதியாக தொழிலாளியாகியே வீடு செல்வார். 113என்ற பெரும்பான்மையை தன்னிடம் நிரூபித்தாலே் மாத்திரமே மஹிந்த ராஜபக்ச தலைமையிலான எம்மை ஆளும் கட்சியாக ஏற்றுக்கொள்வாராம். அரசியலமைப்பில் எந்த இடத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது உங்களிடம் 113பெரும்பான்மையை காட்டுமாறு.
நாட்டின் அரச தலைவரான மைத்திரிபாலசிறிசேன அரசியலமைப்பை மீறி நடந்திருந்தால் உயர் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள். நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஆட்சியாளர் முடிவுக்கு கொண்டு வந்தால் பொதுமக்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனிநாடாளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வந்தமை தொடர்பில் கதைக்க வேண்டாம். வின்ஸ்டன் கருவாகாமல், தொழிலாளர் ஆகாமல் உயர் நீதிமன்றத்துக்கு சென்று மஹிந்தவின் நியமனம் குறித்து சரியாபிழையா என்று கேட்க முடியும்.
அரச தலைவர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு எதிராக கொலை சதி முன்னெடுக்கப்பட்ட நிலையில்,கொலை செய்யப்படும் வரை அதை பார்த்துகொண்டிருக்கமுடியாது.சபாநாயகர் சுயாதீனமாக இருக்க வேண்டும். எனவே ரணிலிடம் பறிக்கப்பட்ட அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வின்ஸ்டன்கருவாக வேண்டாம். இரண்டு நாட்களுக்கு முன்னதாக மஹிந்தவை பிரதமராக ஏற்றுக்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று காலைஅதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி ஸ்ரீகொத்தாவின்சபாநாயகராக மாறியுள்ளார். அரசியலமைப்புடன் விளையாட வேண்டாம்.
நாட்டின் சட்டத்துடன் விளையாட வேண்டாம். இரண்டு மூன்று தூதரகங்களின் ஆதரவு எமக்கு இல்லாவிட்டாலும் இலட்சக் கணக்காணமக்கள் எம்முடன் உள்ளனர். மகாநாயக்க தேரர்கள், கர்த்தினால் மற்றும் இந்து, முஸ்லிம் மதத்தலைவர்கள் மஹிந்தவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.எமக்கு கிடைத்த சுதந்திர ஆட்சியை மறுபடியும் வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்ப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரச தலைவரினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றுகூறிவரும் ஜே.வி.பி மஹிந்த மற்றும் அவர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையை நீக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
எனினும் ஜே.வி.பி யின் இந்த நடவடிக்கை ஜனாநாயகம் என்ற சொல்லை விபசாரத்துக்காக பயன்படுத்துவதாக அமைந்துள்ளதாக மஹிந்தாவாதியான விமல் வீரவன்ச சாடியுள்ளார். இவ்வளவு நாட்கள் வெளியில் வராமல் இருந்த மக்கள் விடுதலை முன்னணி என்ற சிவப்பு யானைக் குட்டி ஜனாநாயகத்தை பாதுகாக்க இன்று வெளியில் வந்துள்ளதாம். மாகாணசபை தேர்தலை ஒத்திவைத்த போது, சிவப்பு யானைக்குட்டி நுகேகொடைக்கு வந்ததா ஜனநாயகத்தை பாதுகாக்க? ஜனாநாயகம் என்று சிவப்பு யானைக்குட்டி கூறுவது ரணில் விக்கிரமசிங்கவைதான்.
மக்கள்விடுதலை முன்னணி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பபதற்கு தான் இன்று முன்வந்திருக்கின்றது. அதற்காக ஜனநாயக்கம் என்ற சொல்லை விபசாரத்துக்காக பயன்படுத்துகின்றது. அலரி மாளிக்கைக்குள் மக்களின்பாதுகாப்பில் உள்ள ரணில், இந்த யுத்தம் நுகோகடையில் மக்கள்விடுதலை முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகின்றார்.
அது ரணிலை பாதுகாப்பதற்காகவும், மேற்கத்தேய நாடுகளுக்கு தேவையானதாகவும் காணப்பட்ட யுத்தம். சத்திர சிகிச்சை ஊடாக ரணில்என்ற புற்று நோயை நீக்கவேண்டிய தேவை எழுந்தது. அதனை மக்களால் செய்யமுடியாது. அதனை செய்ய கூடியவர் மைத்திரிபால சிறிசேன. அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவால் கடந்த26 ஆம் திகதி அரசியல் மேடையில் இருந்து ரணிலை அகற்ற முடிந்தது.
0 Comments