Home » » காவியுடையைக் களைந்தார் ஞானசார தேரர்! சிறைக் கைதிகளுக்கான ஜம்பரை அணிகிறார்

காவியுடையைக் களைந்தார் ஞானசார தேரர்! சிறைக் கைதிகளுக்கான ஜம்பரை அணிகிறார்

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் தற்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் ஐந்தாம் இலக்க வோட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை ஆயுதம் தாங்கிய இரண்டு சிறைக்காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலைகளில் சிறைக் கைதிகள் பயன்படுத்தும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளை சேர்ட், வெள்ளை சாரம், மிருதுவான ஜம்பர் என்று கூறப்படும் காற்சட்டை போன்றவையே அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலையில் இருக்கும்போது ஞானசார தேரர் ஜம்பர் அணிய வேண்டியது அவசியமாகும் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஞானசாரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும் அது சிறைச்சாலையில் இருக்கும்போது நான்கு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று சிறைச்சாலை தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |