Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திரகிரகணம் இன்று : இலங்கையில் தென்படும்


21ஆம் நூற்றாண்டில் இடம்பெறவுள்ள நீண்டநேர சந்திரகிரகணத்தை இன்று 27ஆம் திகதி பார்க்ககூடியதாக இருக்கும்.

நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது சந்திரகிரகணம் ஆகும்.

சூரியன் , பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன. இந்த முழு சிகப்பு சந்திர கிரகணம் 1 மணித்தியாலம் 43 நிமிடங்களிற்கு இடம்பெறக்கூடும். அந்தவேளையில் நிலவில் முழுவதுமாக இருள் சூழ்ந்து காணப்படும். இந்த நூற்றாண்டின் மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இதுவாகும்.

இந்த முழுமையான சந்திர கிரகணம் ஆபிரிக்கா ,மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ,இந்துமா சமுத்திர வலயத்திற்குட்பட்ட நாடுகளில் தெளிவாக காணக்கூடியதாக இருக்கும் .

இதனை இலங்கையிலிருந்து நேரடியாக பார்க்க முடியும் இரவு 10 மணி முதல் அதிகாலை வரை இதனை பார்வையிட முடியுமாக இருக்கும். -(3)

Post a Comment

0 Comments