Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

படகில் சென்ற குடும்பத்தினரை விடாமல் துரத்தி வந்த விஷப்பாம்பு! அதன் பின் நடந்த திக் திக் வீடியோ

அமெரிக்காவில் படகில் சென்ற குடும்பத்தினரை பாம்பு விரட்டியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் Tennessee பகுதியின் Knoxville நகரைச் சேர்ந்தவர் Robbins இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ பலரை பதற வைத்துள்ளது.
அதில், நான் மற்றும் என் குடும்பத்தினர் ஆண்டுதோறும் Adventure Amputee Camp-ல் கலந்து கொள்வோம். அந்த வகையில் இந்தாண்டிற்கான கேம்ப் சென்றிருந்ததோம்.
அப்போது North Carolina-வில் இருக்கும் Fontana Lake-ல் படகில் சென்று கொண்டிருந்தோம். இரண்டு படகுகள் இணைக்கப்பட்ட நிலையில் சென்றோம்.
ஒரு படகில் நான் மற்றும் என் மனைவி குழந்தைகள் இருந்தோம். அப்போது யாரும் அழையா விருந்தாளி நச்சு வகை பாம்பு ஒன்று அந்த ஏரியில் சென்று கொண்டிருந்தது.
அதை ரசித்து கொண்டிருந்த போது, திடீரென்று அது நாங்கள் இருந்த படகை நோக்கி வேகமாக தண்ணீரில் நகர்ந்து வந்தது. இதனால் நான் உட்பட அனைவரும் பீதியடைந்தோம்.
பாம்பின் வேகம் அந்தளவிற்கு இருந்தது. என் குழந்தைகள் சிலர் அந்த பாம்பைக் கண்டு உயிர் பயத்தில் அலறினர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

0 Comments