கட்டுநாயக்க விமான சேவைகள் அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், இதற்கென விமான நிலையத்தில் அமைக்கப்படும் ஈ-கேட்டைப் பயன்படுத்தி விமான நிலைத்திற்குள் பிரவேசிக்க முடியும், விமான நிலையத்தில் இருந்து துரிதமாக வெளியேறவும் முடியும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்நாட்டு விமானப் பயணங்களை ஆரம்பிக்கத் தேவையான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. நேபாளத்தைப் போன்று வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமானசேவையை ஆரம்பிப்பது இலக்காகும். இதற்கான வசதிகளும், ஒடுபாதைகளும் ஏற்படுத்பத்தப்பட இருக்கின்றன. மட்டக்களப்பு, சிகீரிய போன்ற பிரதேசங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானசேவை ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
இ-பாஸ்போட் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென விசேட குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. இதில் ஏற்பட்ட தாமதித்தினால் இந்த ஈ காட் (E-Card ) முறைமை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


0 Comments