Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரஸ்யா தலிபானிற்கு ஆயுதங்களை வழங்குகின்றது- அமெரிக்க தளபதி குற்றச்சாட்டு


ரஸ்யா தலிபான் அமைப்பிற்கு ஆயுதங்களை வழங்குகின்றது என ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரின் பிரதான தளபதி ஜெனரல் ஜோன் நிக்கல்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

ரஸ்யா இதன் மூலம் ஆப்கானிஸ்தானை ஸ்திரதன்மை இழக்கச்செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தஜிக் எல்லை ஊடாக தலிபானிற்கு ரஸ்ய ஆயுதங்கள் வந்துசேர்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்பினரின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறும் போக்கு காணப்படுகின்றது ரஸ்யா இதனை பயன்படுத்தி தலிபானிற்கான தனது ஆதரவை நியாயப்படுத்தப்பார்க்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா தங்களிற்கு நிதிஉதவியை வழங்கிவருவதாக தலிபான் அமைப்பினரே தெரிவித்துள்ளனர் மேலும் ஆப்கான் தலைவர்கள் ரஸ்யாவால் தலிபானிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை எங்களிடம் காண்பித்துள்ளனர் எனவும் அமெரிக்க தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments