Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் பாலியல் சேட்டை விட்ட 3 இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு- கல்லடி பிரதேசத்தில், வீதியால் சென்ற பெண் ஒருவருடன், பாலியல் சேட்டை விட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 3 இளைஞர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டார்.
கல்லடி பீச் வீதியால் நேற்றுமுன்தினம் மாலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் பாலியல் சேட்டை விட்டுள்ளனர். குறித்த பெண் சத்தமிட்டு கத்தியதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இளைஞர்களை மடக்கி பிடித்து நைப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். காத்தான்குடி, பூநொச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20, 23 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எம். கணேசராஜா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments