Home » » சீறும் புலியின் வடிவில் இல்லம்! - பாடசாலை மாணவர்களின் சாதனை

சீறும் புலியின் வடிவில் இல்லம்! - பாடசாலை மாணவர்களின் சாதனை

முல்லைத்தீவு - செம்மலை மகா வித்தியாலயத்தில் நடந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்களால் அமைக்கப்பட்ட சீறும்புலியின் முகம் போன்ற இல்லம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. செம்மலை மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நேற்று பிற்பகல் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.
இதில், சேரன், சோழன், பாண்டியன் ஆகிய இல்லங்கள் ரீதியாக மாணவர்கள் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வில் பாண்டியன் இல்லம் இல்ல அலங்காரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. முழுமையான இயற்கை பொருட்களை கொண்டு சீறும் புலியின் முகத்தை மாணவர்கள் தமது இல்லமாக வடிவமைத்திருந்தமை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |