( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பாடசாலை மைதானத்தில் கடந்த வியாளக்கிழமை ( 25 ) இல்லங்களுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டி ஆரம்பமானது.
முதல் அரையிறுதிப் போட்டியில் நாவலர் இல்லம் ( மஞ்சள்) 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 72ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விபுலானந்தர் இல்லம் ( சிவப்பு ) 8 ஓர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து34 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் நாவலர் இல்லம் ( மஞ்சள்) வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராமகிருஸ்னா ( நீலம் ) இல்லம் 8 ஓவர்களில் 7விக்கட்டுக்களை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா ( பச்சை ) இல்லம் 8ஓவர்களில் 1 விக்கட்டினை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நாவலர் இல்லம் ( மஞ்சள்) 8 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 72ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா ( பச்சை ) இல்லம் 8 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 47 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நாவலர் இல்லம் ( மஞ்சள்) 5 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.





0 Comments