பல நாட்களாக இக்குப்பைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசிவருகின்றது. கல்முனை மாநகரசபை குப்பைஅள்ளும் ட்ராக்டர் அதனை ஏற்றாமல் செல்வதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் இந்தக்கப்பையை ஏற்றிச்செல்லுமாறு கூறியும் அவர்கள் ஏற்றாமல் நழுவிச்சென்றுவிடுவதாகக்கூறபப்டுகிறது.
இதனை அங்குள்ள பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் அங்கு நேரடியாகச்சென்று கல்முனை சுபத்ராராமய பௌத்த விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரருடன் கலந்துரையாடியபோது அவரும் மாகரசபையின் பொடுபோக்குத்தனம் பற்றி விபரித்தார்.
கல்முனை சுபத்ராராமய பௌத்த விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கூறுகையில்:
கல்முனை மாநகரத்தில் வணக்கஸ்தலம் பாடசாலை மக்கள் குடியிருப்பு உள்ள இடத்தில் கொட்டப்படும் குப்பைகள் கல்முனை மாநகரசபையால் அகற்றப்படாமல் குவிந்து காணப்படுகிறது.
இந்த இடத்தில் அருகே பௌத்த விகாரை இந்து ஆலயங்கள் மக்கள் குடியிருப்பு என்பன அருகருகாக உள்ளன. மேலும் இது பிரதான பாதை.இங்கு குப்பைகளை வெளியிடத்தில் இருந்துகொண்டுவந்து போடுகிறார்கள். தமிழ் சிங்கள் மக்கள் வாழ்ந்துவரும் இந்த இடத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுத்தமான நாட்டை உருவாக்க இன நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சியெடுத்துவருகிறார்.
இந்த நிலையில் கல்முனை மாகரசபை ஆணையாளர் மற்றும் ஊழியர்கள் இவ்வாறு தமிழ்ப்பிரதேசங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது கவலையளிக்கிறது.
இதனால் டெங்கு நுளம்புகள் பரவுவதுடன் தொற்றுநோய்களும் பரவும் அபாயமுள்ளது.
கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கல்முனை மாநகரசபை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் எனறு தெரியவில்லை.
உடனடியாக இக்குப்பைகள் அகற்றப்படவேண்டும் . இன்றேல் இது வியடத்தில் வெகுசனப்போராட்டமொன்றை முன்னெடுத்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர தயாராகவுள்ளேன். என்றார்.
பிரபல சமுகசேவையாளர் ராஜன் கூறுகையில்:
இப்பகுதிவாழ் மக்கள் பலதடவைகள் கூறியும் குப்பைஅள்ளும் வாகனம் ஏற்றாமல் சென்றமை அதிருப்தியளிக்கின்றது. மாகரசபையின் இத்தகைய செயற்பாடுகள் பற்றி கடந்தகாலத்தில் நாம் அமைச்சர் ரவூப்ஹக்கீம் தொடக்கம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் இன்னும் அந்தப்புறக்கணிப்பு தொடர்கிறது. இந்தத்தேர்தலில் இதற்கான பதிலை எமது மக்கள் வெளிப்படுத்திக்காட்டுங்கள். மீதியை பிறகு பார்ப்போம். என்றார்.







0 Comments