Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஈரானில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை டிரம்ப் நிர்வாகமே தூண்டியது – ஈரான் அரசாங்கம் குற்றச்சாட்டு

அமெரிக்கா தனது உள்விவகாரங்களில் தலையிடுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.ஐநாவிற்கு எழுதியுள்ள கடிதமொன்றிலேயே ஈரான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் தலைமைத்துவம் பல்வேறு டிவிட்டர் செய்திகள் மூலம் ஈரானிய மக்களை குழப்பகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தூண்டியது என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் உள்விவகாரங்களில் கடந்த காலங்களில் பல தடவைகள் அமெரிக்கா தலையிட்டுள்ளது என ஈரான் ஐக்கியநாடுகளிற்கான கடிதத்தில் தெரிவித்துள்ளது.
எனினும் அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கம் சர்வதேச உறவுகளை நாகரீகமான விதத்தில் முன்னெடுப்பதற்கான அனைத்து கொள்கைகளையும் சர்வதேசசட்டங்களையும் மீறியுள்ளது என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

Post a Comment

0 Comments