Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புலிகள் புதைத்த தங்கம் இல்லை;தோண்டுவது நிறுத்தம்

முல்லைத்தீவு நகருக்கு அருகிலுள்ள ஆற்றுப் பகுதியில் தமிமீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் தங்கம், பணம் மற்றும் வெடி பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு இணங்க, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், கடந்த சில நாட்களாக பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணை தோண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதும், இதுவரை எதுவும் கிடைக்கப் பெறாமையால், இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாருக்கு இந்த தகவலை அளித்திருப்பினும், அது தவறானதாக தகவலாக ஆனமை, வன்னி நிலப்பரப்பு, அப்போது அவர்கள் பார்த்தது போலன்றி பெருமளவு மாற்றம் பெற்றிருப்பதாலேயே என பொலிஸார் கூறியுள்ளனர்.
சுமார் பண்ணிரண்டு, பதிணைந்து வருடங்களுக்கு முன்னர் அவர்கள் அப் பகுதியில் பார்த்த விடயங்களை தற்போது அவர்களால் அங்கு காணமுடியாதுள்ளமையே, இந்த நிலைக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments