இலங்கைக்கு வரவுள்ள ஐ.நாவின் மூவரடங்கிய குழு, சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தடுப்பு நிலையங்களுக்குச் சென்று தகவல்களைத் திரட்டவுள்ளது.
ஐ.நாவின் விசேட நிபுணர் பப்லோ டி கிறீவ் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது, சுயாதீனத் தன்மை, வௌிப்படைத் தன்மையுடன் காணாமற்போனோர் அலுவலகத்திற்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையிலேயே மூவரடங்கிய குழு, இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மூவரடங்கிய குழுவொன்று இன்றைய தினம் இலங்கையை வந்தடையவுள்ளதாக, கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.


0 Comments