Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டது தமிழ்க் குடும்பம்!

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போரின் போது கிழக்கு மாகாணத்தில் ஐ.நா அமைப்புக்காக பணியாற்றிய லோரன்ஸ், 2012ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவில் தஞ்சமடைந்திருந்தார்.எனினும் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்தே, இவரது குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தும் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கனடிய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments