Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தப்பி ஓடிய கைதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் எடுத்த அதிரடி முடிவு

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்து, கஞ்சா திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் தீர்ப்பு வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மூவருக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் குறித்த மூன்று சந்தேகநபர்களையும் வவுனியா சிறைச்சாலையில் இருந்து யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும், 2 மணிநேர தீவிர தேடுதலின் பின்னர் அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீண்டும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் யாழ்.மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்நசெழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதன்போது குறித்த சந்தேகநபர்கள் மூவரும் தம்மீதுள்ள குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து, மூவருக்கும் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அறிவித்தார்.

Post a Comment

0 Comments