எந்தவொரு செய்தி இணையத்தளங்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை என ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் “சில செய்தி இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எவ்வாறாயினும், செய்தி இணையத்தளங்களை தடைசெய்வதில் எவ்வித பயனும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments