காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளார் என காத்தான்குடி சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.காத்தான்குடி 3ம் குறிச்சி பழைய விதானையார் வீதியை சேர்ந்த 12 வயது சிறுமியான ஏ.பாத்திமா ஸஹா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13.4.2017 தொடக்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (10.5.2017) புதன்கிழமை மாலை உயிரிழந்தள்ளார்
குறித்த சிறுமி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார்
காத்தான்குடியில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: