18 வயது பாடசாலை மாணவியொருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட போவதாக அச்சுறுத்தி அந்த மாணவியிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை பணம் பெற்ற 18 வயது மாணவன் ஒருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவர்கள் இருவரும் களனி பேலியகொட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் காதலர்கள் என்பதுடன் குறித்த மாணவி தனது நிர்வாண புகைப்படத்தை வட்ஸ்அப் மூலம் தனது காதலான அந்த மாணவனுக்கு அனுப்பியுள்ளதாகவும் பின்னர் அந்த புகைப்படத்தை காட்டியே மாணவன் அச்சுறுத்தி அவளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் காதலனின் கோரிக்கைப்படி நிர்வாண படத்தை அனுப்ப முடியாது என கூறியுள்ளதுடன் பின்னர் காதலன் கோபித்துக்கொண்டதால் தனது நிர்வாண படத்தை அவள் அவனுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த படங்கள் இணையத்தளத்தில் வந்துவிடுமென்ற அச்சத்தில் அவள் வீட்டில் பணத்தை திருடி அவனுக்கு வழங்கியுள்ளதுடன் வீட்டில் அடிக்கடி பணம் காணமல் போவது தொடர்பாக தேடிப்பார்த்த போதே இந்த சம்பவம் வீட்டாருக்கு தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -
0 Comments