Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜேர்மன் பாராளுமன்ற தலைவர் இலங்கை எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாட்டின் பாராளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பேட் லம்மீர்ற் (Norbert Lammert) மற்றும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதுள்ளது.
இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் எதிர்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் அமைப்பு ஏற்பாடுகள் குறித்து எதிர்கட்சி தலைவர் ஜேர்மன் நாட்டு பாராளுமன்ற தலைவருக்கு தெரியப்படுத்தினார்.
சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தினார்.
ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments