திருகோணமலை பள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கற்பிணிப்பெண் (29) டெங்கு நோயின் காரணமாக சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமானார்.
கர்ப்பப்பைக்கு வெளியே கற்பம் தரித்திருந்த குறித்த பெண்னிற்கு டெங்கு நோயும் தாக்கியிருந்ததன் காரணமாக சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணத்திற்கு பிறகு திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு தாக்கத்தின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,881 க்கும் மேலாக அதிகரித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments