சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி சமயங் என்றழைக்கப்படும் பாதாள குழுவின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடுவல மாநாக சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீண்ட விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சுத்திரக் கட்சியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவருக்கு தங்க இடமளித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


0 Comments