Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புகைத்தலால் இலங்கையில் வருடாந்தம் 20,000 பேர் பலி

சிகரட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் புகைத்தல் காரணமாக வருடம் ஒன்றில் சுமார் 20 ஆயிரம் இலங்கையர்கள் பல்வேறு நோய்களால் உயிரிழப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் மஹிபால தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 57 பேர் மரணத்தை தழுவுவதாக சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
புகைத்தல் தவிர்ப்பு வலயங்களை பிரகடனப்படுத்தல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், சிகரட் பெட்டிகளில் புகைப்படங்கள் மூலமான எச்சரிக்கை விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் புகைப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவும் எவ்வாறாயினும் தொடர்ந்தும் இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் -

Post a Comment

0 Comments