Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அடுத்த கைது சிராந்தி ராஜபக்‌ஷவா ? : இல்லை நானே கைதாவேன் என்கிறார் மகிந்த

அடுத்ததாக சிராந்தியல்ல நானே கைது செய்யப்படவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
விளக்க மறியலிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை பார்வையிடுவதற்காக நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற போது அடுத்ததாக சிராந்தி ராஜபக்ஸவை கைது செய்ய வேண்டுமென புரவசி பலய அமைப்பினர் தெரிவித்து வருவதாக ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” அடுத்து சிராந்தியல்ல நனே கைது செய்யப்படவுள்ளேன். அந்த அமைப்பு டொலர்களில் இயங்குவதுதானே அதனால் அவர்களுக்கு எது வேண்டுமானாலும் கூறலாம். நான் ஏற்கனவே சிறைக்கு சென்றுள்ளேன். அதுவும் பொய்க் குற்றச்சாட்டிலேயே சென்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments