கல்வி அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை ,Double A நிறுவனம் என்பன இணைந்து சு+ழலின் நண்பர்கள் "Friends of the Planet"எனும் செயற்றிட்டத்தினூடாக நாடாளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சு+ழல் சமூகப் பொருளாதாரம் தொடர்பான செயற்றிட்டப் போட்டியில் மட்/வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலை தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
இப்போட்டிக்காக பொலித்தின் பாவனையினைக் குறைத்தல் எனும் செயற்றிட்டம் கடந்த பங்குனி மாதம் தொடக்கம் வைகாசி மாதம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் தேசியப் போட்டிக்கு 297 செயற்றிட்டப் பிரேரணைகள் அகில இலங்கை ரீதியாகக் கிடைக்கப்பெற்று 7 பாடசாலைகளின் பிரேரணைகளே தெரிவு செய்யப்பட்டன.
இப்பாடசாலைகளுள் வின்சன்ற் மகளிர் உயர்தரப்பாடசாலை மட்டுமே ஒரேயொரு தமிழ் பாடசாலையாகும். இப்போட்டியின் மதிப்பீடு பல கட்டங்களில் நடைபெற்று இறுதிப்போட்டி இம்மாதம் 14 ம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இறுதியாக தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளுக்கான முன்வைப்பில் வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலை மொத்த புள்ளிகள் 160 இல் 146 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
இச் செயற்றிட்டத்தை ஆர். பவித்திரா , எஸ்.துவாரகா, எஸ்.லிதுசிக்கா, ரீ.தர்சனா, கே.அபர்ணா எனும் 5 மாணவிகளும் பொறுப்பாசிரியர் திருமதி அமரா தேவகாந்தனின் வழிநடத்தலில் முன்னெடுத்தனர். இவர்கள் எதிர்வரும் புரட்டாதி மாதத்தில் தாய்லாந்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ""கண்ணா"" எனும் சுற்றாடல் செயற்றிட்டத்தை பார்வையிட Double A நிறுவனத்தினால் அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இச் செயற்றிட்டத்திற்காக பாடசாலை அதிபர் திருமதி ஆர். கனகசிங்கம், பிரதி அதிபர் திருமதி எஸ். ரவிச்சந்திரா, உதவி அதிபர் திரு.ஏ.அருளானந்தம் ஆகியோர் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளனர்.
0 Comments