மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஒந்தாச்சிமடம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
ஒந்தாச்சிமடம் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் ஒந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஜெகன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments