கடந்த 27-02-2016 அன்று கல்முனை நகரிலேவைத்து மிகவும் கொடூரமானமுறையிலே கடமையாற்றும் சர்வோதயாஅலுவலகத்திற்குள்ளே வைத்துகழுத்து அறுக்கப்பட்டுபடு கொலைசெய்யப்பட்ட திருமதிசுலக்ஷனா திலீபன் அவர்களின் கொலையுடன் தெர்ர்புடைய நபர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கங்கோரி கவனயீர்பப் போராட்டத்துடன் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது
கல்முனை சமுக நல பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் 14 ஆம்திகதி கல்முனையில் நடைபெற்றதுடன்; மகஜரும் கையளிக்கப்பட்டது
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பின்வருமா
கடந்த 27-02-2016 கல்முனைநகரிலேவைத்துமிகவும் கொடூரமானமுறையிலேதான் கடமையாற்றும் சர்வோதயாஅலுவலகத்திற்குள்ளே வைத்து கழுத்துஅறுக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதிருமதிசுலக்ஷனா திலீபன் அவர்களின் மரணம் கல்முனையைமாத்திரம் அல்ல ஒட்டுமொத்த இலங்கையையும் கவலை கொள்ள வைத்தது.
இச்சம்பவமானது மக்களின் மனதிலே பலத்த அச்சத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்தது. காரணம்,வடக்கிலே வித்தியா என்ற இளம் சகோதரி காமுகர்களினால்அவளின் இளமையும் உயிரும் பறிக்கப்பட்ட போதும் இன்னும் எந்தவிதமான நீதியும் கிட்டாமல் அச்சம்பவம் உள்ளது.
இந்நதச் சூழ்நிலையில் கல்முனைவாழ் மக்கள்,பொதுஅமைப்புக்களாகியநாம் வேண்டுவது
• இவ்கொலையாளிக்கான தீர்ப்பானது எந்தவித இழுத்தடிப்புக்களும் இன்றிவிரைவுபடுத்தப்படவேண்டும்.
• இதில் சம்மந்தப்பட்டுள்ளஅனைவரும் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுதண்டனைவழங்கப்படவேண்டும்
• இக்கொலையாளிசார்பாக எந்தவித சட்டத்தரணியும் ஆஜராகவோஅல்லது அனுசரணை வழங்கவோ கூடாது.
• இக்கொலையாளிக்கு வழங்கும் தண்டனையானது ஒட்டுமொத்த இலங்கைத்தீவிலும் இவ்வகை கொலை முயற்சிகளில் ஈடுபடும் அல்லதுஈடுபடஎத்தனிக்கும் அனைவருக்கும் ஒருமுன்மாதிரியாகஅமையவேண்டும் என்பதேபேரணியின் நோக்கம்.
பொலிஸ்மாஅதிபருக்கு:-
எமதுநாட்டைகுற்றச்செயல்கள் இல்லாதவளமான,சௌபாக்கியமானநாடாககட்டியெழுப்பவேண்டும் எனமுயற்ச்சிகள் மேற்கொள்ளும் உங்களைக் கனப்படுத்தி
கடந்த 27-02-2016 அன்று கல்முனைநகரிலே நடைபெற்றகொலைச்சம்பவத்தின் சூத்திரதாரி தற்போதுவிளக்க மறியலிலே வைக்கப்பட்டுள்ளார். இருந்தபோதும் ஒட்டுமொத்த எமது சமூகம் இக்கொலையாளி இன்னும் சிலருக்கு (கொலையாளி சார்ந்தவர்களுக்கு) சம்பந்தம் இருப்பதாக நம்புகின்றோம். எனவே இக்கொலைக்கு விரைவான நீதிகிட்டுவதாகவும், இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதாகவும்,உங்களது தலைமையில் ஒருகுழுவைஅமைத்து இதற்கான நீதியைப் பெற்றுத்தரும்படி கல்முனைவாழ் மக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் 14-03-2016 அன்று அமைதிப் பேரணி நடாத்தப்பட்டு அவ் மகஜரைதங்களுக்குவந்து சேரும்படி ஒட்டுமொத்த மக்களாலும் கல்முனைபொலிஸ் நிலையபொறுப்பதிகாரியிடம் இவற்றைகையளிக்கின்றோம்.
சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு :-
எமதுநாட்டில் கடந்த சிலமாதங்களாக குறிப்பாக வடகிழக்கிலே யுத்தமுடிவிற்கு பிற்பாடுஅதிகமானகொலைகள்,பாலியல் துஷ்பிரயோகம் எனதொடர்ந்தவண்ணம் உள்ளன. கொலையாளிகளும்,காமுகர்களும் ஏதோஒருவகையில் பணத்தினாலும்,செல்;வாக்கினாலும் மற்றும் சட்டமேதைகளினாலும் தப்பிக்கமுயற்சிக்கின்றனர்.
இவைதற்பொழுதுஎமக்குசெய்தியாகவும்,சுயநலபோக்காகவும் உணர்வோமாகில்,எதிர்காலத்தில் எமக்கும் எமதுகுடும்பத்திற்கும் நடைபெற இருக்கும் இவ் பாதகமானசெயலுக்குநாம் முன்னெச்சரிக்கையாகசெய்யமுயற்சிப்பதுஎன்ன?
எனவேஒட்டுமொத்தகல்முனைவாழ் மக்களும் தங்களிடம் வேண்டுவது,நாம் சமூகமாற்றத்திற்காகவும் அறம் சிறந்தநாடாக இவ் நாடுமிளிரவேண்டும் எனவிரும்;பிஎமதுஒவ்வொருஅடிகளையும் எடுத்துவைக்கின்றோம்.
அந்தவகையிலேகொலையாளிகள்,பாலியல் துஷ்பிரியோகத்தில் ஈடுபடுவோர்,கொள்ளையர்கள் மற்றும் சமூகத்தில் அநீதி இழைப்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதன் மூலமாய் எதிர்காலசமூகம் விழிப்புணர்வுஅடையவேண்டும் எனவிரும்புகின்றோம்.
அந்தவகையிலேதான் இவ்கொலையைஒப்புக்கொண்டுள்ளகொலையாளிசார்பாகசட்டத்தரணிகள் ஆஜராகவோஅல்லதுஅனுசரணைவழங்குவதோ கூடாதுஎனவலியுறுத்தி,தர்மத்திற்குசெவிசாய்க்கக்கோரி 14-03-2016 அன்றுஅமைதிப்பேரணிகல்முனைநகரிலேநடத்தப்பட்டுகல்முனைதமிழ்ப் பிரதேச சபை செயலாளர் ஊடாகசட்டத்தரணிகள் சங்கத்திற்கு இவ் மகஜர் கையளிக்கப்படுகின்றது.
எனவேஎமதுநாட்டில் ஒருஒழுக்கமான,அராஜகம் அற்றசமூதாயத்தைக் கட்டியெழுப்பகல்முனைவாழ்மக்கள் மற்றும் பொதுஅமைப்புக்களும் மேற்கொள்ளும் இம்முயற்ச்சிக்குஅரசாங்கம்,பொலிஸ்மாஅதிபர் உள்ளிட்டஉயர் அதிகாரிகள் குறிப்பாகசட்டத்தரணிகள் யாவரும் ஒத்துழைப்புவழங்கிநீதியான,நேர்மையான,தன்னிறைவானசமூகத்தைக் கட்டியெழுப்பஉதவிடும் படிதாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம்.
என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 Comments